வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

21 ஜூலை, 2011

படித்ததில் பிடித்தது...


மறதி வாழ்க

இயற்கையிலேயே ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ வைப்பதற்கு நினைவு மறதி மிகவும் முக்கியமாக இருக்கிறது. மறதி தான் ஒரு மனிதனை வாழ வைக்கும். என் வீட்டில் நடந்த துக்க நிகழ்வை நான் நிமிடத்திற்கு நிமிடம் நினைத்துக் கொண்டேயிருந்தால் அது என்னை நிம்மதியாக வாழ வைக்காது.

அறவே அல்ல, அவ்வப்போது அதை மறந்து விடுகின்ற ஒரு நிலைமை ஏற்படுகின்ற போதுதான் மனிதனால் தொடர்ந்து வாழ முடிகிறது.

மறதி இல்லாவிட்டால் மனிதனால் சுகமாக வாழ முடியாது. மறதி இல்லாமல் நினைவாற்றலே தொடர்ந்து இருக்குமேயானால் அடிக்கடி நினைவுகள் வந்து துன்புறுத்தும். எனவே அந்த நினைவுகளை விட்டொழித்து மறதியை நாம் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.

இது ஒரு அசலான வாழ்வியல் தத்துவம்.

-முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி .